2ம் லெப். மாலதி - 2nd Lt. Malathi

300 Views
தமிழன்
தமிழன்
16 Nov 2023

⁣#முதல்_பெண்_மாவீரர்
#2ம்_லெப்_மாலதி

யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து #சயனைட் உட்கொண்டு விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வல்லாதிக்க #இந்திய_இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் #தமிழர்_மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது

1987 ஐப்பசி 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக #துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2ம் லெப். மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் #முதல்_பெண்_மாவீரர் 2ம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

#வீரவணக்கம்

Show more

0 Comments Sort By

No comments found

Up next