20-02-2009 | ⁣கொழும்பில் வான்கரும்புலி வானூர்திகளை இலக்குவைத்து சிங்களவரின் வான்காப்புச் சூடு

236 பார்வைகள்
Nanni Chozhan
Nanni Chozhan
11 May 2022

⁣நேரம்: ⁣21:43

⁣இது கொழும்பு தாஜ் சமுத்திரா தங்ககத்தின் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் இருந்து எடுக்கப்பட்ட நிகழ்படமாகும். அந்த பாரிய வெடியோசையுடன் கூடிய ஒளிக்கீற்று கேணல் ரூபனின் கரும்புலி வானூர்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கட்டடத்தின் 12ஆவது மாடியில் மோதி வெடிக்கும் நிகழ்வு ஆகும்.

⁣சம நேரத்தில், சரியான வான்காப்பு பயிற்சியின்மையால் சிங்கள படைத்துறையின் வான்காப்பு படைவீரர்கள் கன்னாபின்னாவென்று வான்நோக்கி தடங்காட்டி சன்னங்களால் அச்சத்தில் சுடுவதையும் நோக்குக.

இந்த தாக்குதலானது உண்மையில் கொழும்பு வான்படைத் தலைமையகம் மீதுதான் நடந்திருக்க வேண்டும். ஆனால் கேணல் ரூபன் வான்படைத் தலைமையகம் மீது மோதுவதற்காக வானூர்தியைப் பதித்த போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மொட்டைமாடியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இரு சிங்கள வான்காப்பு வீரர்களின் சுடுகலச் சூட்டிற்கு அன்னாரது வானூர்தி இலக்கானதால் அவரால் மேற்கொண்டு ⁣செலுத்த இயலாமல் போக அக்கட்டிடத்தின் 12ஆவது மாடியில் மோதி வெடித்தார். இந்த கட்டிடத்திற்கு பின்னால் தான் கொழும்பு வான்படைத் தலைமையக கட்டிடம் இருந்தது. கொஞ்சம் பிசகிவிட்டது. இல்லையென்றால் அன்று சிங்களவனின் வான்படைத் தலைமையகம் நீறாகியிருக்கும்.
- ✍️⁣நன்னிச் சோழன்

மேலும் காட்ட

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது