வீரத்தளபதி சமர்க்கள நாயகன் நினைவில் - Remembering Brigadier Balraj

251 Views
தமிழன்
தமிழன்
22 May 2024

⁣எமது விடுதலை இயக்கத்தால் முதன் முதலில் பெயர் சூட்டி அழைக்கப்பட்ட ஆகாய கடல்வெளி மரபுவழி இராணுவ நடவடிக்கையில் படைமுகாமின் தென்பகுதிக்கான கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்று சமரை வழிநடத்திய வீரத்தளபதி சமர்க்கள நாயகன்.
#பிரிகேடியர்_பால்ராஜ்
#சமர்க்கள_நாயகன்
#லீமா
#ஆகாய_கடல்வெளி_நடவடிக்கை
#ஆனையிறவு

“தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.’

#தமிழீழ_தேசியத்தலைவர்
#மேதகு_வே_பிரபாகரன்

Show more

0 Comments Sort By

No comments found

Up next