Video Player
00:00
00:00
00:00

ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம்

89 பார்வைகள்
Leema Balraj
Leema Balraj
17 Jul 2023

⁣ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம்.

எமது தலைமுறைக்கு தவறான வரலாற்றுப்புரிதலை திணிக்கும் இவ்வாறான வெந்து தணிந்தது காடு போன்ற ‘#தமிழின_விரோதப்_படைப்பு’களை (களை)இனங்கண்டு புறக்கணிப்பது எமது ஒவ்வொருவரினதும் காலக் கடமை.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.
எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.
#தமிழீழ_தேசியத்தலைவர்

மேலும் காட்ட

0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது