தேசத்தின் குரல் - Voice of the Nation

379 Views
தமிழன்
தமிழன்
24 Dec 2023

⁣விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு உயிர்மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகின்றது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில் ஒரு அரசியல் சக்தியாகவும், அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகின்றது. ஒரு உறுதியான கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான நீதியான அரசியல் இலட்சியம். நீண்டகால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொதுசனத்தின் பலமிக்க ஆதரவு இத்தனை பண்புகளையும் உடையது எமது விடுதலை இயக்கம் என முத்தாய்ப்பு வைத்ததுடன் அதனை சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்வதில் பாலா அண்ணா அயராது இயங்கினார். அதற்காக இறுதி மூச்சுவரை அவர் உழைத்தார்.
————————————-
சு.ப.தமிழ்ச்செல்வன்
பொறுப்பாளர்
அரசியல்துறை
தமிழீழம்.

#தேசத்தின்_குரல்

Show more

0 Comments Sort By

No comments found

Up next