o maraniththa veeranee | ஓ மரணித்த வீரனே | women version

201 Views
Nanni Chozhan
Nanni Chozhan
24 Dec 2022

⁣'"அலைவந்து தாலாட்டும் சிறுதீவு"' யென்றான் தேசியக்கவியன்று - அந்த
அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று!

அன்றாடங்காய்ச்சிகள் முதல்
அன்னைமண் காத்தோர் வரை
உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன்
உதித்திட முன்னரே காவுகொண்டாய்!

புத்தனை வணங்கிய பேய்கள்
ஓய்ந்தனவென்றிருக்க,
புதுப்பேயாய்,
நாம் வணங்கிய தாயே, நீ வந்ததேனோ?

தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே
தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்)

அவர் நடந்த கரையோரம்,
திரைதொட்ட காலம் மலையேறிட,
அவர் கிடக்கக் கரையெங்கும்,
திரைதொட்ட காலமானதன்று!

நாம் நத்தார் நாளில் திழைத்திருக்க,
நம் வீதிபோட வந்தவை எம்மைத் தூக்க,
உலையேற்றக்கூட வழியின்றி
திரும்பியது வேரறுந்த வாழ்வு!

Show more

0 Comments Sort By

No comments found

Up next