மாவீரர் நாள் 2023 - Maaveerar Naal 2023

210 Views
தமிழன்
தமிழன்
04 Dec 2023

⁣இன்றைய தலைமுறையும் எதிர்காலச் சந்ததியும் பாதுகாப்புடன் வாழவேண்டிய
சூழ்நிலையினை தோற்றுவிக்க வேண்டியது எமது கடமையாகின்றது.இவ் உணர்வுகளை,
இவ் உணர்வுகளால் தோற்றம்பெற்ற மாவீரர்களின் நினைவுகள்தான் உறுதிப்படுத்துகின்றது.

இவர்களின் செயல்கள்தான் எமது வரலாற்று அத்தியாயத்தின் தலைப்புக்களாகும்.
சுதந்திர உணர்வுகளுடன் கிளர்ந்தெழுந்து எதிரியுடன் போராடி, தமது உதிரத்தாலும் உயிராலும் எமதுபாதுகாப்பை நிலை நிறுத்தியவர்களின் உணர்வுகளும்,
நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இம் மாவீரர்களின் நினைவுக் கற்கள் எமது தேசத்தின் அத்திவாரக் கற்களாகின்றது. இவர்களின் உறுதி எம்மை நெறிப்படுத்துகின்றது.

களத்தில் இவர்கள் காட்டிய வீரம் எம்மைப் பலப்படுத்துகின்றது. இவர்களின்
இலட்சியம் எமது வெற்றியாகின்றது. உறுதிமிக்க எம்தலைவரின் வழிகாட்டலில் எமதுதேசம் விடுதலை பெறும்வரை தொடர்ந்து பயணிப்போம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Show more

0 Comments Sort By

No comments found

Up next