காலக் கடமை குழுமம் அறிக்கை

36 Views
தமிழன்
தமிழன்
08 May 2024

⁣தமிழீழத் தேசியத்தலைவரின் வீரம் செறிந்த உயிரர்ப்பணிப்பை தமிழர் வரலாற்றிலிருந்து அழித்துவிடும் நோக்கோடு திட்டபிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா-இந்திய-சர்வதேச புலனாய்வுச் சதிகளை முறியடித்து வீறுகொண்டு எழுகிறது தமிழினம்.

முள்ளிவாய்க்காலோடும்,
நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத்தளங்களில் தேசியத்தலைவரின் உருவப்படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போகிறது தமிழினம்.

இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை,
விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை.
#தமிழீழத்_தேசியத்தலைவர்
#மேதகு_வே_பிரபாகரன்

Show more

0 Comments Sort By

No comments found