இந்த காணொளியை யாரேனும் நல்ல நிலைக்கு கொண்டு வரவும்

149 Views
Nanni Chozhan
Nanni Chozhan
15 Jan 2021

⁣இதற்குள் கரும்புலிகள் பற்றிய பல காணொளிகள் உண்டு

⁣இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 3

பாடல் வரிகள்:

கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்லவா
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பைச் சொல்லவா
கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்லவா
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பைச் சொல்லவா
வான் ஏறி வந்து பகைவன் குண்டைக் கொட்டினான்
பட்டினியால் எம் இனத்தை பாவி வாட்டினான்
மழலை கூட எங்கள் மண்ணில் மகிழ்வை இழந்தது
என்ன வாழ்வு என்று எங்கள் இனமே அழுதது
கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்கிறேன்
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பைச் சொல்கிறேன்
கரும்புலியாய் சேர நான் கடிதம் எழுதினேன்
கடிதத்துக்குள் எந்தனது உணர்வை எழுதினேன்
அண்ணனிடம் எந்தனது மனதை அனுப்பினேன்
நாளும் அண்ணன் பதிலுக்காக பார்த்து ஏங்கினேன்
அண்ணன் பதிலைக் கண்டு கரும்புலி என்ற வடிவம் தாங்கினேன்
கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்கிறேன்
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பைச் சொல்கிறேன்
தேக‌த்தையே வ‌ருத்தி தின‌மும் வென்றேனே
தேர்வு என்ற ப‌யிற்சியில் தேரி வ‌ந்தேனே
தேச‌ம் தானே எந்த‌ன் நெஞ்சில் வாழ‌க் க‌ண்டேனே
அந்த‌த் தேச‌ம் மீட்கும் போரில் நானும் வேக‌ம் கொண்டேனே
எங்க‌ள் அண்ணனது ஆனைக்காக‌ காத்திருந்தேனே
கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையைச் சொல்கிறேன்
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பைச் சொல்கிறேன்
காத்திருந்த எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது
பூத்திருந்த உணர்வுக்கு வேகம் தந்தது
உணர்வு தந்த அண்ணனோடு உணவு உண்டேனே
அந்த உணவு கூட அமுதமாக இருக்கக் கண்டேனே
விட்டுப் பிறிந்த போது அண்ணன் முகமும் வாடக் கண்டேனே
இலக்கு நோக்கி எந்தனது கால்கள் நடக்குது
என் இனத்தை அழிக்கும் பகையை அழிக்க உள்ளம் துடிக்குது
பகையின் குகையில் புகுந்து அவன் உள்ளத்தில் அடிக்கிறேன்
என் தேசப் பணி முடிப்பதற்காய் களத்திலே வெடிக்கிறேன்

Show more

0 Comments Sort By

No comments found

Up next